Skip to main content

Vasthu palan..

கடைபிடிக்க வேண்டிய முக்கிய வாஸ்து விதிகள்!

🏡 மனை வாங்கும்போது சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருப்பது நல்லது.

🏡 கட்டடம் கட்டும்போது கிழக்கிலும் வடக்கிலும் அதிக காலி இடம் விட்டு கட்ட வேண்டும். வடக்கு பகுதி பள்ளமாகவும் அதிக எடை இல்லாதவாறும் கட்ட வேண்டும். நீர் சேமிக்கும் தொட்டி அங்கு இருக்கலாம்.

🏡 தெற்கு பகுதி சற்று மேடாக இருத்தல் நலம். அதே சமயம் அங்கு அதிக எடை ஏற்றலாம். மாடி படிக்கட்டு போன்ற எடை ஏற்றும் கட்டுமானம் தெற்கு பகுதியில் இருப்பது நல்ல பலன் தரும்.

🏡 குழாய் கிணறு (டிழசநறநடட) வடக்கு அல்லது கிழக்கு பகுதியில் வர வேண்டும்.

🏡 சமையல் அறை தென் கிழக்கு மூலையில் (அக்னி மூலையில்) அமைக்க வேண்டும்.

🏡 படுக்கை அறை தென் மேற்கில் இருத்தல் நலம் தரும்.

🏡 கழிப்பறை மற்றும் குளியலறைகள் வட மேற்கில் (வாயு மூலை) வர வேண்டும்.

🏡 தென் மேற்கு மூலையில் (குபேர மூலை) கழிப்பறை மற்றும் குளியலறைகள் அமைக்கக்கூடாது. அமைத்தால் கடன் நிச்சயம் வாங்குவார்கள்.

🏡 குழந்தைகளுக்கும் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கும் வடகிழக்குப் பகுதியில் படுக்கையறையை அமைத்துக்கொள்ளலாம்.

🏡 சமையலறை மற்றும் பூஜையறை வடகிழக்கிலும், தென்மேற்கிலும் கண்டிப்பாக இருக்கக்கூடாது.

🏡 தென் கிழக்கு மூலை பாதிக்கப்பட்டால் பெண்களுக்கு பாதிப்பு உண்டு.

🏡 வீட்டை சுற்றி சுற்றுச்சுவர் (உழஅpழரனெ றயடட) இருப்பது நல்லது.

🏡 வீட்டின் நுழை வாசல் கிழக்கிலோ அல்லது வடக்கிலோ இருத்தல் வேண்டும்.

🏡 ஒவ்வொரு அறையிலும் கூடிய மட்டிலும் நுழைவது கிழக்கிலோ அல்லது வடக்கிலோ இருக்குமாறு கட்டுங்கள்.

🏡 கோவிலோ அல்லது இடுகாடோ அல்லது மின்மாற்றியோ (வசயளெகழசஅநச) வீட்டின் மிக அருகாமையில் இல்லாதவாறு இருத்தல் நல்லது.

Comments