Skip to main content

Happie birthday pratheeba patail

🏁 இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் திருமதி.பிரதிபா தேவிசிங்க் பாட்டில் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்கோன் மாவட்டத்தில் இருக்கும் நத்கோன் என்ற கிராமத்தில் 1934ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி பிறந்தார்.

🏁 தனது கல்லு}ரி நாட்களில் விளையாட்டுத் துறையில் தீவிரமாக கவனம் செலுத்திய இவர், டேபிள் டென்னிஸில் சிறந்து விளங்கினார். 1962ல், எம்.ஜே. கல்லு}ரியின் 'கல்லு}ரி ராணி" என்று பெயரிடப்பட்டு, அப்பட்டத்தையும் வென்றார்.

🏁 தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞரான இவர் ராஜஸ்தானின் கவர்னர் பதவியிலும் பணிபுரிந்திருக்கிறார். ஆனால், இத்துடன் இவர் தனது 28 ஆண்டுகால நீண்ட அரசியல் வாழ்க்கையில், பிரதிபா பாட்டில் அவர்கள் துணை கல்வியமைச்சர் பதவியிலிருந்து சமூக நலத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் வீட்டுவசதித் துறை போன்ற பல்வேறு அமைச்சர் பதவிகளிலும் பணிபுரிந்திருக்கிறார்.

ருடால்ஃப் ஹெல்  📹 வீடியோ கேமரா ட்யு+பை கண்டுபிடித்த ருடால்ஃப் ஹெல் 1901ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள எக்முல் கிராமத்தில் பிறந்தார்.

📹 ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு செய்திகளை அனுப்ப பயன்படுத்தும் தொலைநகல் சாதனத்தின் முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் (ர்நடடளஉhசநiடிநச) என்ற கருவியை 1920-ல் கண்டுபிடித்தார். ஃபேக்ஸ், டெலக்ஸ், கலர் ஸ்கேனர் ஆகியவற்றுக்கு இதுவே முன்னோடி.

📹 இவரது 'ஹெல் ரெக்கார்டர்" கருவி, தகவல் தொடர்பு துறையில் பெரும் வரவேற்பை பெற்றதால், 1929-ல் சொந்த நிறுவனம் தொடங்கினார். இவர் 1932ல் எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஹெலிகல் ஸ்கேன் பிரின்ட் சிஸ்டம் என்ற கருவியைக் கண்டுபிடித்தார்.

📹 வியன்னா போட்டோகிராஃபிக் சொசைட்டியின் தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார். தொலைத்தொடர்பு துறையின் ஆசானாக போற்றப்படும் ருடால்ஃப் ஹெல் தன்னுடைய நு}றாண்டு வாழ்க்கையைப் பு+ர்த்தி செய்து 2002-ல் மறைந்தார். முக்கிய நிகழ்வுகள்

🏁 1927ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ராம் பிரசாத் பிசுமில் காலமானார்.

🎥 2004ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.பாலசுப்ரமணியன் காலமானார்.

✦ 1946ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி முதல் இந்தோ-சீன போர் துவங்கியது.

👉 1961ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி போர்ச்சுகீசிய குடியேற்ற நாடான டாமன் மற்றும் டையு+ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

✈ 1972ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி கடைசித் தடவையாக சந்திரனுக்கு மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பு+மிக்கு திரும்பியது.

Comments