Skip to main content

அந்நியன் ஸ்டைலில் அவதாரம் எடுக்கும் லீஜியன்ஸ

இன்றைக்கு இந்தியாவில் பரபரப்பான ஒரு விஷயம் லீஜியன் ஹேக்கர்ஸ் பற்றிதான்.அப்போலோ ஹாஸ்பிட் டலின் செர்வரை ஹேக் செய்து அதில் உள்ள டேட்டாக்க ளை திருடி வைத்துள்ளார்கள்.இதில் ஜெயலலிதாவுக்கு
அளிக்கப்பட்ட ட்ரீட்மென்ட் பற்றிய முழு ஹிஸ்டரியே
இவர்களிடம் இருக்கிறது.விரைவில் லீஜியன்ஸ் வெளி யிடுவார்கள் என்று செய்திகள் வந்துள்ளது..

அந்நியன் படம் பார்த்திருப்போம்.

அதில் ஒரு கறுப்பு
அங்கியை போட்டுக்கொண்டு கம்யூட்டர் முன் உடகார் ந்து கொண்டு ஊழல் செய்தவர்களின் டேட்டாக்களை திரட்டி அவர்களை தேடிப்பிடித்து தண்டித்து இது கருட புராணம் என்று சொல்வாரே விக்ரம் அதே மாதிரி லீஜி யன் என்கிற அமைப்பு ஊழல் வாதிகளை தேடிபிடித்து அவர்களின் டேட்டாக்களை திருடி அவர்களை நாட்டுக்கு அடையாளம் காட்ட கிளம்பியுள்ளது..

தி குயன்ட்  என்கிற இணைய பத்திரிக்கையில் பூனம் அகர்வால்என்கிற ரிப்போரட்டருடன் லீஜியன் ஒருவர் உரையாடிய பதிவை கேட்டேன்..அப்பொழுது தான் எனக் கு இவர்கள் மீது  நம்பிக்கை வந்தது. அந்த லீஜியன் மிக தெளிவாக பேசிகிறார்.காங்கிரஸ் மற்றும் பிராடு செய்து ஏமாற்றும் ஊடகங்கள் பற்றி விளாசி தள்ளுகிறார். இந்தி யாவில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்கிறார்.

போகிற போக்கில் பிஜேபிக்கு ஒரு குட் வைக்கிறார்.
பிஜேபி கட்சி ஒகே.டிஜிட்டல் இந்தியா என்கிற ஒருநல்ல
பிளாட்பார்மை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்
சொல்லி அடுத்து அவர் சொன்ன ஒரு வார்த்தை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது..அதாவது மோடி இஸ் எ கிரே ட் மேன் என்கிறார்..உடனே அந்தம்மா பிஜேபி தான் உங்களுக்கு பைனான்ஸ் செய்கிறார்களா என்று கேட் கிறார்.

உடனே லீஜியன் ஹலோ..நாங்க எடுத்து வைத்திருக்கிற டேட்டா வை வைத்து மிரட்டியே எங்களால் பணம் சம்பாதிக்க முடியும்..ஆனால் எங்களின் நோக்கம் அதுவ ல்ல நாடு நன்றாக இருக்க வேண்டும்.ஊழல் இருக்கக் கூடாது என்கிறார். ஹேக்கரின் ஆங்கில உச்சரிப்பை வைத்து உறுதியாக சொல்லலாம் இது ஒரு இந்தியன் ஹேக்கர்ஸ் தான்.

விஜய் மல்லையாவின் ட்விட்டர் அக்கவுண் டின் வழி யே ஊடுருவி அவர் அரசை ஏமாற்றி பதுக்கி வைத்துள்ள
சொத்து விபரங்களை கண்டு பிடித்துள்ளார் இந்த ராகுல் காந்தி சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்கள் கள்..அதோடு கிடைத்துள்ளதாம்.அதை விரைவில் அறிவிக்கப் போகி றார்கள்.அதோடு பர்காதத்,ராவிஸ்குமார் போன்ற மீடி யா திருடர்களின் இருட்டு ரகசியங்களை  வெளிச்சத்தி ற்கு கொண்டு வருவார்களாம்.

பார்த்தீர்களா..நாடு ஒரு புதிய வழியில் ஊழலை எதிர் த்து கிளம்பி உள்ளது.ஹேக்கிங் ஒரு குற்றம் தான் ஆனால் அதன் வழியே நாட்டில் உள்ள ஊழல்வாதிகள் பற்றிய வெளிச்சங்கள் வந்தால் நல்லது தானே. இன்றை க்கும் அமெரிக்காவில் அதன் அதிபரை விட ஆஸ்திரேலி யா வின் ஜூலியன் அசாஞ்சுக்கு தான் மவுசு அதிகம். காரணம் விக்கி லீக்ஸ்.மூலம் அவர் ஹேக் செய்து வெளியிட்ட ஊழல்களே..

நமக்கெல்லாம் வாக்கிங் தெரிந்த அளவிற்கு ஹேக்கிங்
பற்றி தெரிந்திருக்க மாட்டோம்.ஹெக்கின்ங் என்கிற
வார்த்தைக்கு ஊடுருவல் என்று பொருள்.இமெயில்,
ட்விட்டர் பேஸ்புக்  வெப்சைட் போன்றவற்றில்நமக்கு
தெரியாமலேயே நாம் பயன்படுத்தும் பாஸ் வேர் டை கண்டுபிடித்து உள்ளே நுழைந்து அவர்கள் இஷ்டத்திற்கு
புகுந்து விளையாடுவது தான் ஹேக்கிங்.

ஏன் .2002 வரை உலகத்திற்கே ஹேக்கிங் பற்றி அவ்வள வாக தெரிந்திருக்காது..அட்ரியன் லேமோ என்கிற 19 வயசு சுள்ளான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வருக் குள் ஈசியாக நுழைந்து என்னப்பா பில் கேட்ஸ்அப்படி ஒன்றும் உங்களுக்கு சரக்கு இருக்கிற மாதிரி தெரியலை யே என்று நக்கல் செய்ய ஆரம்பித்தான் அப்பொழுது தான் பில்கேட் சுக்கே நமக்கும் மீறிய கொம்பன்கள் இரு க்கிறார்கள் என்று தெரிந்தது..

அப்புறம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை யாஹூ என்று  தம்பி பூந்து விளையாடிவிட்டார். .19 வயசில் உலகின் முன்னணி நிறுவனங்களின் செர்வருக்குள் ஊடுருவி
விளையாடுவது சாதாரண விஷயமா..போலீஸ் தூக்கி
ஜெயிலில் போட்டு விட்டார்கள்.ஜெயிலுக்கு போய் விட்டு வந்த பிறகும் அட்ரியன் லேமோ ஹேக்கிங் தான் செய்து கொண்டு இருந்தார்.அதாவது வைட் ஹாட் ஹே க்கராக மாறிவிட்டார்

அதாவது ஹேக்கர் குரூப்பிலும் 2 டைப் இருக்கிறார்கள். ஒரு குரூப் வைட் ஹாட் ஹேக்கர் என்கிற நல்ல திருடர் கள். இன் னொரு டீம் ப்ளாக் ஹாட் ஹேக்கர் என்கிற கெட்ட திருடர் கள்.அதாவது லீஜியன்ஸ் மாதிரி என்று சொல்ல நினைத் தாலும் மனசு வேண்டாம் அவர்கள் நல்ல நோக்கத்திற்காக செயல்படுகிறார்கள் என்று சொல் கிறது.

இந்த நல்ல திருடர்கள் வேலையே ஒரு கணினி நெட்
வொர்க்கை டிபன்ஸ் செய்வது.அதாவது ஒரு கம்பெனி யின் செர்வர்களை யாரும் ஹேக் செய்யாமல் பார்த்துக்
கொள்வது..அதாவது திருடனுக்கு தானே தெரியும் எப்படி
திருட பிளான் செய்வார்கள் என்று.அந்த அடிப்படையில்
வைட் ஹாட் ஹேக்கர்ஸ்  டேட்டா திருடு போகாமல் செக்யூர் செய்து கொடுப்பார்கள்.ஆனால் ப்ளாக் ஹாட் ஹேக்கர்ஸ் வேலை டேட்டாக்களை திருடுவதே.

லீஜியன் ஹேக்கர்ஸ்  ஒரு ப்ளாக் ஹாட் ஹேக்கர்ஸ் தான் துவரை இந்தியாவில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற் பட்ட சர்வர்கள் இந்த லீஜியன்களால் ஹேக் செய்யப்பட் டுள்ளன.ஒரு டெரா பைட் ட்டுக்கும் மேலே தகவல்கள் இருக்கிறதாம்., சில அரசியல் தகவல் களை வெளியிட் டால், இந்தியா மிகப்பெரும் குழப்பங் களைச் சந்திக்க நேரிடும் என்கிறார்கள் லீஜியன்ஸ்

விக்கி லீக்ஸ் மாதிரி இந்தியாவில் இணையத்தின் மூலம் லீஜியன்களால் புரட்சி நடந்து  ஊழல் வாதிகள் வெளிச்ச த்திற்கு  வந்து தண்டிக்கபட்டு நாடு திருந்தினா ல் நமக்கும் சந்தோசம் தானே..

😃😃😃#**wtsapp fwds**#😃😃😃

Comments