Skip to main content

நுரையீரல் தொற்று காரணமாக கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

#டிசம்பர் 1-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி,

#கடந்த 7-ம் தேதி  உடல் நலம் தேறியதைத் தொடர்ந்து வீடு திரும்பினார்.

#இந்நிலையில் இப்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

#12:04 மணி
              ~காவேரி மருத்துவமனை நிர்வாகம், தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில், 'திமுகவின் தலைவரும், தமிழக முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

#11:58 மணி
                ~தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியைப் பார்க்க டி.ஆர்.பாலு மருத்துவமனைக்கு வந்து இருக்கிறார்.

#11:30 மணி
                ~திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, சளி தொந்தரவு அதிகரித்ததன் காரணமாகவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

Comments