Skip to main content

பர்சனல் பைனான்ஸ்

உங்கள் 'முதுமை' காலம் முழுவதும் 'பொற்காலம்' தான்..!

இதை மட்டும் பாலோ பண்ணுங்க..

வயது என்பது வெறும் எண்ணையே குறிக்கின்றது. 60 வயதைத் தொடும் யாரையாவது கேட்டுப் பாருங்கள். அவர்கள் இதைத்தான் கூறுவார்கள்.

ஒரு மூத்த குடிமகனாக அரசிடமிருந்தும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் பல்வேறு சலுகைகளை ஒருவர் பெற முடியும். அறுபதைக் கடந்த பிறகு அல்லது அறுபத்தைந்து வயதை தொட்டவுடன் சில சாதகமான விஷயங்கள் நடக்கும். இந்த சதகமான விஷயங்கள் நம்முடைய நிதிநிலை மட்டுமல்ல மருந்துவ ரீதியாகவும் பல நன்மைகள் உண்டு. அதில் சிலவற்றை தான் நாம் இப்போது பல்வேறு பிரிவுகள் கீழ் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இக்கட்டுரையின் 2வது பாகத்தை படிக்க,

மருத்துவக் காப்பீடு மீது செலுத்தப்படும் பிரிமியத் தொகைக்கு (தீவிர உடல்நலக் குறைவு அல்லது பிற காப்பீட்டுத் திட்டங்கள்) பிரிவு 80D-இன் கீழ் வரிச்சலுகை வழங்கப்படுகிறது.

இந்த வரிச்சலுகை மருத்துவக் காப்பீடு செய்யப்பட்ட ஒரு நபரின் வயதை பொறுத்து அமையும். 60 வயதிற்குட்பட்ட ஒருவர் தனக்கு, துணைவர், குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு செலுத்தப்படும் பிரிமியத் தொகையில் உச்ச வரம்பாக 25,000 ரூபாய் ஒரு வருடத்திற்கு வரிச் சலுகையாகப் பெற முடியும்.

அதே நேரம் அவருடைய வயது 60-ற்கு மேல் இருக்குமானால் (60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள்) அவர்களுக்கு உச்ச வரம்பு 30,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வரி செலுத்துபவர் தன்னுடைய வயது வயதிற்குள்ளும் பெற்றோருடைய வயது 60-ற்கு மேலும் இருப்பின் 80D பிரிவின் கீழ் வரும் தன்னுடைய வரிச்சலுகையை மொத்தம் 55,000 ரூபாய் வரை பெற முடியும்.

60வயது அல்லது அதற்கு மேல் வயதுள்ள வரி செலுத்துபவர் தனக்கும் தன் பெற்றோருக்கும் சேர்த்து அதிகபட்சமாக மொத்தம் 60,000 வரை மேற்கூறிய பிரிவின் கீழ் சலுகையாகப் பெற முடியும்.

வருமான வரி கணக்கீட்டிற்காக வருமான வரித்துறை 60 வயதை மூத்த குடிமக்களாகவும் 80 வயதை மிக்க மூத்த குடிமக்களாகவும் கருதுகிறது.

ஒரு சாதாரண 60 வயதுடைய இந்தியக் குடிமகனாக இருந்தால் (கடந்த ஆண்டில் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர் ஆனால் கடந்த ஆண்டின் கடைசி நாளில் 80 வயதுக்கு உட்பட்டவர்) அவரின் வருமானத்தில் 3 லட்சம் வரை வரியிலிருந்து முழுமையான விலக்கும், 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை 10% வரியும், 5 முதல் 10 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 20% வரியும் அதற்க்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு 30% வரியும் பொருந்தும்.

அதுவே அவர் மிக மூத்த (சாதாரண) குடிமகனாக இருந்தால் (கடந்த ஆண்டில் 80 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்) 5 லட்சம் வரை வரி விலக்கும், 5 முதல் 10 லட்சம் வரை 20% வரியும் அதற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30% வரியும் பொருந்தும்.

வருமான வரியின் தொகை மற்றும் கூடுகைத் தொகை (surcharge) (வருமானம் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருப்பின் வரித் தொகையில் 15%) ஆகியவையோடு கல்வி கூட்டு வரி (education cess) மற்றும் உயர் கல்விக் கூட்டு வரி (secondary and higher education cess) ஆகியவை சேர்த்து மொத்த வரியில் மேலும் 3 சதவிகித கூடுதலாகச் அளவிற்கு செலுத்த வேண்டியிருக்கும்.

வங்கிகளில் வைப்புகளை (டெபாசிட்டுகள்) வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். தங்களுடைய இந்த வைப்புகளின் மீது அவர்கள் பெறும் வட்டி (தொடர் வைப்பு, அதே வங்கியின் மற்ற கிளைகளை வைக்கப்பட்டிருக்கும் வைப்புக்கள் அல்லது இளவர் (minor) மீதான வைப்புகள்) 10000 ரூபாய்க்கும் அதிகமாக ஒரு வருடத்தில் இருப்பின், வங்கி அந்த வட்டித் தொகையில் 10% அளவிற்கு மூல வருவாய் வரியை பிடித்துக் கொள்ளும். இதுவே நிறுவன வைப்புக்களாக இருந்தால் வட்டி வருடத்திற்கு 5000 ரூபாயை மிஞ்சினாலும் மூல வருவாய் வரி பிடித்தம் செய்யப்படும்.

வருமான வரி வரம்பிற்குக் கீழ் வரும் மூல வருவாய் வரிப் பிடித்தத்தை தவிர்க்க ஒருவர் வங்கி தரும் விளக்கப் படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த சலுகை அனைவருக்கும் பொருந்தும் என்றாலும் படிவங்கள் வேறுபடும்.

ஒரு மூத்த குடிமகனாக வருமான வரி வரம்பிற்குள் உங்கள் ஆண்டு வருமானம் இருக்குமானால், படிவம் 15H-ஐ (படிவம் 15G மூத்த குடிமக்கள் அல்லாதோருக்கு) வங்கியிடம் சமர்பித்து வரிப் பிடித்தத்தை தவிர்க்கலாம். ஒரு வருடத்திற்கும் அதிகமான கால அளவுள்ள டெபாசிட்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த படிவத்தை, பொதுவாக ஏப்ரல் மாதத்தில், சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பெரும்பாலும் ஒய்வு பெறுபவர்களின் முதல் தேர்வாக உள்ளது இந்த திட்டம் ஒய்வு பெறுபவர்களின் நிதித் திட்டங்களில் முக்கியமாக இடம்பெற வேண்டும். பெயர் குறிப்பிடுவது போலவே இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே. இதை அஞ்சலகத்திலோ அல்லது வங்கிகளிலோ 60 வயது முடிந்த எவரும் துவங்கலாம்.

முன்கூட்டியே ஒய்வு பெறுபவர்கள் ஒய்வின்போது கிடைத்த பலன்களை மூன்று மாத அவகாசத்திற்குள் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் ஏற்றுக் கொள்ளப்படும். இந்தத் திட்டம் ஐந்து வருட நீட்சி கொண்டிருந்தாலும் முதிர்வுக்குப் பிறகு மூன்று வருடங்கள் வரை மறு நீட்டிப்பு செய்ய முடியும்.

தற்போது வங்கி சேமிப்பு திட்டத்தில் 8.6% வருட வட்டி வழங்கப்படுவதோடு அதனை ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் பெற்றுக் கொள்ளலாம். இந்த வட்டி வரிவிதிப்பிற்குட்பட்டது. இந்த வட்டி விகிதங்கள் 100 அடிப்படைப் புள்ளிகளோடு அரசு முதலீட்டுப் பத்திரங்களுடன் தொடர்புப் படுத்தப்பட்டுள்ளன.

ஒருமுறை முதலீடு செய்தால் இந்த விகிதங்கள் முதிர்வு காலம் வரை நிலையாக இருக்கும். இந்த திட்டம் ஏறக்குறைய இருப்பதிலேயே அதிக வரிக்குப்பிந்தைய வருவாயை பிற நிலையான வட்டிவிகித முதலீடுகளை ஒப்பிடும்பொது அளிக்கின்றன.

இதற்கான முதலீட்டு உச்ச வரம்பு 15 லட்சமாக இருப்பதுடன் ஒருவர் ஒன்றிர்க்கும் மேலான கணக்குகளை வைத்துக் கொள்ள முடியும். முதலீடு மற்றும் அதன் மீதான வட்டி என்பது முற்றிலும் உறுதி செய்யப்பட்ட ஒன்று. வேறென்ன வேண்டும், இது 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகைகளையும் தருவதோடு முதிர்வு காலத்திற்கு முன் பணமெடுக்கவும் வழிவகை செய்கிறது. சந்தோசம் தானே?

Comments